Chess and Quiz Competition 2012
மாநில அளவிளான பொது அறிவு மற்றும் சதுரங்கப் போட்டி 2012.
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு & பாதுகாப்பு மற்றும் சங்கம் தீபம் நல்வாழ்வு அறக்கட்டளையும் இணைந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில அளவிலான பொது
அறிவு மற்றும் சதுரங்கப் போட்டி 2012. 15.09.2012 அன்று கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, எண் 59. அண்ணாசாலை, சென்னை 600002. என்ற பள்ளி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடத்தப்பட்டது.
மாநில அளவிளான சதுரங்கப் போட்டி:
முதல் கட்டமாக மாநில அளவிளான சதுரங்கப் போட்டியானது பார்வையற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்காக 15.09.2012 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை நடை பெற்றது. இப்போட்டியின் நடுவராக திருமதி. S.பானுமதி சதுரங்க போட்டி நடுவர்; அவர்கள் பொறுப்பேற்று நடத்தித்
தந்தார்.
மாநில அளவிளான பொது அறிவுப் போட்டி:
இரண்டாம் கட்டமாக மாநில அளவிளான பொது அறிவுப் போட்டியானது பார்வையற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்காக 15.09.2012 அன்று மதியம் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடை பெற்றது. இப்போட்டியை சுவடுகள் என்ற அமைப்பு நடுவர்களாக பொறுப்பேற்று
நடத்தித் தந்தது.
பரிசளிப்பு விழா:
மாலை 4.00 மணியளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முனைவர் திரு. R. இராஜகோபால் S.R.M. பல்கலைக்கழகம் அவர்கள். முனைவர் B. அமுதா, உதவி
பேராசிரியர். CSE துறை. S.R.M. பல்கலைக்கழகம்.
திரு. மாலன், ஆசிரியர், புதியத்தலைமுறை வார இதழ். பேராசிரியர். N. அபுல் /பைஸ், துறைத்தலைவர் (Visual
Communication) புதுக்
கல்லூரி. திரு. J.
கோவர்த்தனன், நிறுவனர்
& தலைவர், இனி ஒரு விதி செய்வோம். திருமதி. S. பானுமதி, சதுரங்கப் போட்டி நடுவர் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்து சிறப்பித்தார்கள்.
சதுரங்கப் போட்டி பரிசுகள்:
மாநில அளவிளான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசு ரொக்கப் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 400, மூன்றாம் பரிசு ரூபாய் 300, நான்காம் பரிசு ரூபாய் 100, ஐந்தாம் பரிசு ரூபாய் 100, மற்றும் ஆறாம் பரிசு ரூபாய் 100, வழங்கி கெளரவிக்கப்பட்டது. சதுரங்கப் போட்டியில் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பொது அறிவுப் போட்டி பரிசுகள்:
மாநில அளவிளான பொது அறிவுப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற மூன்று பேருக்கு 8
GB Pen Drive, இரண்டாம்
பரிசு பெற்ற மூன்று பேருக்கு 4 GB Pen Drive, மற்றும் முன்றாம் பரிசு பெற்ற மூன்று
பேருக்கு 4 GB memory card வழங்கி கெளரவிக்கப்பட்டது. பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உதவிகள்:
நடைபாதை வியாபாரம் செய்யும் பார்வையற்ற ஒருவருக்கு
ரூபாய் 400 மதிப்புள்ள 20 ATM Card Steel Cover விற்பனைக்காக வியாபார பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தப்பட்டது.
இப்போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் மழை காலத்தை
பாதுகாப்பாக வரவேற்க (80 பேருக்கு) மழை
காலங்களில் பயன்படுத்தும் குடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
நன்றி தெரிவித்தல்:
மேற்கண்ட மாநில அளவிலான பொது அறிவு மற்றும் சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், இப்
போட்டிகள் நடத்த உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு & பாதுகாப்பு சங்கம் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறொம்.