Activites

சங்கத்தின் செயல்பாடுகள்

2011 ம் ஆண்டு:

மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு & பாதுகாப்பு மற்றும் சங்கம் தீபம் நல்வாழ்வு அறக்கட்டளையும் இணைந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகன் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இரண்டு கட்டமாக தமிழகத்தில் நடத்தப்பட்டது.

மாநில அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:

முதல் கட்டமாக மாநில அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியானது கல்லூரி மாணவ மாணவியர்களுக்காக 13.08.2011 அன்று கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, எண் 59. அண்ணாசாலை, சென்னை 600002. என்ற பள்ளி வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடை பெற்றது. இப்போட்டியில் நடுவர்களாக பேராசியர் திருக்குறள் க. பாஸ்கரன். (நிறுவனர் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்) அவர்களும், முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி, தமிழ்த்துறை பேராசியர். புதுக்கல்லூரி, சென்னை. அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பரிசளிப்பு விழா:

மாலை 4.00 மணியளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு முனைவர் திரு. மு. பொன்னவைகோ. துணை வேந்தர். S.R.M  பல்கலைக்கழகம் அவர்கள் விழா தலைவராக தலைமையேற்று சிறப்பித்துத் தந்தார். மேலும் திரு. க. உதயகுமர், பட்டயக்கணக்காளர், உதயகுமார் அசோசியேட்ஸ் அவர்களும், பேராசியர் திருக்குறள் க. பாஸ்கரன். (நிறுவனர் கருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்) அவர்களும், திரு. திப்பு. பின்னணி பாடகர். அவர்களும், திரு. ஷியாம் சுந்தர், வழக்கறிஞர் அவர்களும், கலைமாமணி V.K.T. பாலன், இயக்குநர் மதுரா டிராவல்ஸ் அவர்களும், முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி, தமிழ்த்துறை பேராசியர். புதுக்கல்லூரி, சென்னை. அவர்களும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்து சிறப்பித்தார்கள்.

பரிசுகள்:

மாநில அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு ரொக்கப் பரிசு ரூபாய் 1000 மற்றும் ரூபாய் 600 மதிப்புள்ள நினைவுப் பரிசும், இரண்டாம் பரிசு ரூபாய் 750 மற்றும் ரூபாய் 400 மதிப்புள்ள நினைவுப் பரிசும், மூன்றாம் பரிசு ரூபாய் 750 மற்றும் ரூபாய் 300 மதிப்புள்ள நினைவுப் பரிசும், ஆறுதல் பரிசாக மூன்று பேருக்கு பேசும் கைக்கடிகாரமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உதவிகள்:

இத்திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் (100 பேருக்கு) இலவசமாக பேசும் கைக்கடிகாரமும், இராணி மேரி கல்லூரியில் முதுகலை பட்டம் பயிலும் மாணவிக்கு ரூபாய் 560 கல்விக் கட்டணமாக காசோலை வழங்கப்பட்டது மேலும் நடைபாதை வியாபாரம் செய்யும் பார்வையற்ற மூன்று பேருக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள வியாபார பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வியாபாரிகளை ஊக்கப்படுத்தப்பட்டது.

மாவட்ட அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:

இரண்டாம் கட்டமாக மாவட்ட அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:யானது தஞ்சாவூர், அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டியானது துவக்க நிலை (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) இடைநிலை (ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை) உயர்நிலை (ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை) என மூன்று குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்பட்டது

போட்டி:யின் நடுவர்கள்

குந்தவை நாச்சியார் கலைக்கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றும் திருமதி கா. லட்சுமி அவர்களும் திருமதி கொ. திராவிட மணி அவர்களும் மாவட்ட அளவிளான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி:யில் நடுவர்களாக கல்ந்துகொண்டு மாணவர்களை உட்சாகபடுத்தினார்கள். மூன்று குழுக்களிலும் மூம்மூன்று மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள்

கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் திரு வி. ஆறுமுகம் அவர்களும், ஆங்கில பேராசிரியை திருமதி எஸ். பத்மப்பிரியா அவர்களும், யோகா ஆசிரியர் திரு பரமானந்தம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

பரிசளிப்பு விழா:

மாலை 4.00 மணியளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மேற்கண்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்,

பரிசுகள்:

துவக்க நிலை மாணவர்களுக்கு முதல் பரிசாக ட்ராவெல் பேக், இரண்டாம் பரிசாக டிபன் பாக்ஸ், மூன்றாம் பரிசாக சில்வர் தட்டு வழங்கப்பட்டது. இடைநிலை மாணவர்களுக்கு முதல் பரிசாக பிரிப் கேஸ், இரண்டாம் பரிசாக சில்வர் குவலை மூன்றாம் பரிசாக ட்ராவெல் பேக். உயர்நிலை மாணவர்களுக்கு முதல் பரிசாக பெரிய பிரிப் கேஸ், இரண்டாம் பரிசாக பெரிய சில்வர் குவலை மூன்றாம் பரிசாக சில்வர் தட்டு. போன்ற பரிசுகள் ஆறுதல் பரிசாக 10 பேர்க்கு டம்லர் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மேற்கண்ட இத்திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு & பாதுகாப்பு சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறொம்

 Please visit this link for THIRUKKURAL competition

http://www.facebook.com/pages/MM-PS/152236024898095

 

Services rendered to the Differently abled Persons by our organization

Year 2011:

To motivate the talents of blind students, Thriukkural recitation competition was conducted by Dheepam welfare trust and the Rehabilitation and Protective association for Differently abled in two stages at Tamilnadu.

State level Thirukkural recitation competition:

Thrukkural recitation competition was conducted for college students on 13.08.11 at Christ church Anglo Indian Higher secondary school, no.59, Anna salai, Chennai 600002 from 10.00 am to 5.00 pm .
For this first level, Professor Thirukkural K.Baskaran(Founder, Karunakaran memorial Thirukkural library) and Dr.Jafer Sadiq Ali (Professor, Department of Tamil, New college ,Chennai) participated and gave their judgments.

Prize distribution:

Prizes were distributed for the winners at 4.00 pm. Dr. M.Ponnavaikko, Vice chancellor, S.R.M. University presided over the function. The other chief guests were Mr.K.Udayakumar, (auditor, Udakurmar Associates), Professor Thirukkural K. Baskaran (Founder, Karunakaran memorial Thirukkural library) Mr. Shyam Sundar (Advocate), Mr. Tippu (playback singer), Kalaimamani V.K.T. Balan (Director, Madura Travels) and Dr.Jafer Sadiq Ali (Professor, Department of Tamil, New college, Chennai)

Prizes:

All the participants were given certificates. Rs.1000/- cash prize and a gift worth Rs. 600/- were given to 1st  prize winner in state level Thirukkural recitation completion. Rs.750/- cash prize and a gift worth Rs. 400 were given to 2nd prize winner. Rs.750/- cash prize and a gift worth Rs. 300 were given to 3d prize winner. Talking watches were given to three participants as consolation prize
Assistance:
All the participants (nearly 70) of Thirukkural competition were given talking clocks. A PG student of Queen Marys college was given a cheque of Rs.500/-.To encourage career, three blind shop keepers were given Rs.1000/- worth free things related to their profession.

District Level Thirukkural recitation competition:

The second stage of this competition was conducted at Government school for blind, Thanjavur.
This was separated into three groups like;
Beginners Level (Class I to class 5)
Intermediate Level (class 6 to class 8)
Higher Level (class 9 to class 10)

Judges:

The judges of district level thirukkural recitation competition were Mrs. K.Lakshmi, senior lecturer, K.N.G.Arts college for women and Mrs. K. Dravida Mani. Three winners were selected from each level.

Special guests:

Mr. V. Arumugham,(Principal, Kings college of Engineering,) Dr. S. Padmapriya, (Professor,Bonsecours college for women) and Mr. Paramanandam (Yoga master, Vivekanandar Peravai)  distributed the prizes in the prize distribution ceremony.

Prizes:

For beginners level, travel bag, tiffin box, silver plate were given for the first, second and third prizes. For intermediate level, brief case, silver pot, travel bag were given for the first, second and third prizes. For higher level, brief case, silver box, silver plate were given for the first, second and third prizes.  Silver Tumblers were given as consolation prize for 10 members. We thank wholeheartedly the participants, special guests and Differently abled for having made this programme a grand success.
Please visit this link for Thirukkural competition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக